தந்தையுடன் செல்ல ரூ.1 கோடி கேட்ட சிறுமி; தாயை கண்டித்த உச்ச நீதிமன்றம்

புதுடில்லி: குழந்தை பராமரிப்பு விவகாரத்தில் தந்தையுடன் செல்ல அவரின் 12 வயது மகள், 1 கோடி ரூபாய் கேட்ட நிலையில், குழந்தையின் மனதை தேவையின்றி கெடுப்பதாக தாயை உச்ச நீதிமன்றம் கண்டித்து உள்ளது.
கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, இது தொடர்பாக மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் முறையிட்டனர். மனு தாக்கல் இதன் இறுதியில், 12 வயது மகள் தந்தையுடன் செல்ல மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அந்த சிறுமியின் தாய் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீண்ட நாட்களாக விசாரணையில் உள்ளது. இதையடுத்து, தந்தை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இதைத் தொடர்ந்து, மக ளை தன் பொறுப்பில் விட வலியுறுத்தி தந்தை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் வினோத் சந்திரன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தந்தை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பி.ஆர்.பட்வாலியா, “குழந்தையை அழைக்க தந்தை சென்றபோது, அவருடன் வர சிறுமி மறுத்துவிட்டார். மாறாக, 'நீ என் அம்மாவை துன்புறுத்துகிறாய்.
''நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டுள்ளாய். 1 கோடி ரூபாய் தந்தால், உன்னுடன் வருகிறேன். இல்லையென்றால் வரமாட்டேன்,” என, கூறியுள்ளார்.
“தாயின் தலையீடு காரணமாகவே குழந்தை அவ்வாறு சொல்கிறார். அதுமட்டுமின்றி குழந்தையின் பள்ளி பதிவேடுகளில், தந்தையின் பெயரை தாய் நீக்கியுள்ளார். இந்த வழக்கில் ஒரு மத்தியஸ்தரை நியமிக்க வேண்டும்,” என, கோரினார்.
மத்தியஸ்தம் தாயின் வழக்கறிஞர் அனுபா அகர்வாலும், மத்தியஸ்தரை நியமிக்க கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் தன் குழந்தையின் மனதை தாய் கெடுத்துள்ளது தெரிகிறது. வழக்கு தொடர்பான விசாரணையில், ஒரு கட்டத்தில் அந்த சிறுமி தன் தந்தையை குச்சியால் தாக்கியதும் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் தன் குழந்தையின் மனதை தாய் கெடுத்துள்ளது தெரிகிறது. வழக்கு தொடர்பான விசாரணையில், ஒரு கட்டத்தில் அந்த சிறுமி தன் தந்தையை குச்சியால் தாக்கியதும் தெரிய வந்துள்ளது.
தேவையில்லாமல் குழந்தையின் மனதை தாய் கெடுக்க வேண்டாம். இன்று, தந்தைக்கு அச்சிறுமி செய்வது நாளை தாய்க்கு திரும்ப வாய்ப்புள்ளது. இரு தரப்பினரையும் மத்தியஸ்தத்துக்கு பரிந்துரைப்பது பொருத்தமானது என நீதிமன்றம் கருதுகிறது.
அதன்படி, இந்த விவகாரத்தில், உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிது பஹ்ரியை மத்தியஸ்தராக நியமிக்கிறோம். இரு தரப்பினருக்கும் இடையிலான அனைத்து பிரச்னைகளையும் அவரே பரிசீலிப்பார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.






மேலும்
-
ஹமாஸ் படையினர் இறக்க விரும்புகிறார்கள்; போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியால் அதிபர் டிரம்ப் ஆவேசம்!
-
பத்து வயது சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான நபரிடம் விடிய விடிய விசாரணை
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
படிக்கும் வயசில் படிக்கட்டு பயணம் எதுக்கு; மாணவர்கள் செயலால் டிரைவர்கள் தவிப்பு
-
அடுத்தடுத்த புயல்களால் பிலிப்பைன்சில் 25 பேர் பலி
-
சிறையிலிருந்து தப்பிய கைதி சில மணி நேரங்களில் கைது