நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூலை 25) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:
ஆசிரியருக்கு குண்டாஸ்
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த செந்தில்குமார், 50, பள்ளி மாணவியர் பலருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
மாணவியரின் வாக்குமூலம் அடிப்படையில், குழந்தைகள் நலன் பாதுகாப்பு குழும உறுப்பினர் புகாரின்படி, போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த, 3ம் தேதி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி எஸ்.பி., நிஷா பரிந்துரைப்படி, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, குண்டர் தடுப்பு சட்டத்தில் செந்தில்குமாரை கைது செய்ய நேற்று உத்தரவிட்டார்.
சில்மிஷ செக்யூரிட்டி சிக்கினார்
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியை சேர்ந்த, 15 வயது சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதே பகுதி கார்மென்ட்ஸில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தவர் முருகேசன். 41.
சில தினங்களுக்கு முன், சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, வெளிப்புற கேட்டை உடைத்து உள்ளே சென்ற முருகேசன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். சிறுமி பெற்றோர் புகாரில், கிருஷ்ணகிரி மகளிர் போலீசார், முருகேசனை கைது செய்தனர்.
தலைமையாசிரியருக்கு கம்பி
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவிக்கு தலைமையாசிரியர் ரமேஷ் குமார், 57, தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது தொடர்பாக, மாணவியின் பெற்றோர் புகாரின்படி, ரமேஷ் குமாரை போக்சோ சட்டத்தில் மார்த்தாண்டம் மகளிர் போலீசார் கைது செய்தனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தண்டாயுதபாணி விசாரணை நடத்தி, தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தவிட்டார்.
பாய்ந்தது குண்டர் சட்டம்
ஈரோடு, வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 31; இவர் மீது, ஈரோடு டவுன், வீரப்பன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் அடிதடி, வழிப்பறி உட்பட, 25க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார்.
ஈரோட்டை சேர்ந்த, 13 வயது சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி விசாரித்த, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். இதை கலெக்டர் ஏற்றதால், தமிழ்செல்வன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
@block_P@
திருநெல்வேலி மேலப்பாளையம், ஆமின்புரம் ரஹ்மானியா மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசாரிடம் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகார் படி, ஆசிரியர் ரபீக்,39, என்பவரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவர், இந்த பள்ளி தாளாளர் ஹசன் அபுபக்கரின் மகன் என்பது விசாரணையில் தெரியவந்தது.block_P




மேலும்
-
மான்செஸ்டரில் படுமோசம்; 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொதப்பிய இந்திய அணி
-
உலக அளவில் வலிமையான சக்தியாக மாறி வரும் இந்திய ராணுவம்; கார்கில் வெற்றி தினத்தில் ராணுவ தளபதி பெருமிதம்
-
சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது; மத்திய அரசு அறிவிப்பு
-
அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்: தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது சுப்ரீம் கோர்ட்
-
சர்ச்சைகளால் தலைப்புச் செய்தியாகும் எம்.பி.,க்கள்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வருத்தம்
-
நிலுவையில் ரூ.63,000 கோடி குடிநீர் வரி; திணறும் டில்லி அரசு