கோல்ட் ப்ளே இசை நிகழ்ச்சி வீடியோவால் வந்த வம்பு; சி.இ.ஓ.,வைத் தொடர்ந்து ஹெச்.ஆர்., ராஜினாமா!

வாஷிங்டன்: கோல்ட் ப்ளே இசை நிகழ்ச்சியின் மூலம் சர்ச்சையில் சிக்கிய அஸ்ட்ரானமர் நிறுவனத்தின் சி.இ.ஓ., ராஜினாமாவைத் தொடர்ந்து, தற்போது ஹெச்.ஆர்., தலைமை பொறுப்பில் இருந்து கிறிஸ்டின் காபோட் ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்காவின் பாஸ்டனில் நடந்த கோல்ட் ப்ளே இசை நிகழ்ச்சியில், அஸ்ட்ரானமர் நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆண்டி பைரன், தனது நிறுவனத்தின் பெண் ஹெச்.ஆர்., கிறிஸ்டின் காபோட்டுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்மூலம், இருவரும் திருமணம் தாண்டிய உறவில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, அஸ்ட்ரானமர் நிறுவனத்தின் சி.இ.ஓ., பதவியை ஆண்டி பைரன் ராஜினாமா செய்தார். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் நடத்தை மற்றும் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை நிர்வாகம் எதிர்பார்ப்பதாகவும், புதிய சி.இ.ஓ.,வுக்கான தேடல் நடந்து வருவதாக அஸ்ட்ரானமர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அஸ்ட்ரானமர் நிறுவனத்தின் ஹெச்.ஆர்., தலைமை பொறுப்பில் இருந்து கிறிஸ்டின் காபோட் ராஜினாமா செய்துள்ளார். இதனை அஸ்ட்ரானமர் உறுதி செய்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "கிறிஸ்டின் காபாட் இனி அஸ்ட்ரானமரில் இல்லை. அவர் ராஜினாமா செய்துவிட்டார். ஏற்கனவே, ஆண்டி பைரன் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார். நிர்வாகக் குழு அதை ஏற்றுக்கொண்டது. இணை நிறுவனர் பீட் டிஜாய் தற்காலிக சி.இ.ஓ.,பணியாற்றுவார். நிர்வாகக் குழு அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்யும்," என தெரிவித்துள்ளார்.







மேலும்
-
ரேஷன் பொருள் வாங்கி வந்த போது டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் பலி
-
அனுமதியற்ற தங்கும் விடுதிகளுக்கு சீல்
-
கருப்பண்ண சுவாமி கோயிலுக்கு 1000 ஆடுகள் நேர்த்திக்கடன்
-
அரிசி கடத்தலை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயற்சி
-
ஹமாஸ் படையினர் இறக்க விரும்புகிறார்கள்; போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியால் அதிபர் டிரம்ப் ஆவேசம்!
-
பத்து வயது சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான நபரிடம் விடிய விடிய விசாரணை