ராஜஸ்தானில் அரசுப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 7 மாணவர்கள் பலி; பிரதமர் இரங்கல்

12

ஜாலாவார்: ராஜஸ்தானில் அரசுப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, காயமடைந்த மாணவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜாலாவார் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசுப் பள்ளி கட்டடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. காலை 9 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தின் போது, சுமார் 60 முதல் 70 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.


இந்த சம்பவத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


நீண்ட காலமாக பள்ளிக் கட்டடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டு வந்ததாகவும், அதனை சீர் செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



@block_Y@

பிரதமர் மோடி இரங்கல்



ராஜஸ்தானில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சமயத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து கொடுத்து வருகின்றனர். block_Y

Advertisement