30ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

புதுச்சேரி: தொழிலாளர் துறை, துணை ஆணையர், சந்திரகுமரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

புதுச்சேரி தொழிலாளர் துறை சார்பில், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தொழிலாளர் துறை வளாகத்தில் வரும் 30ம் தேதி, காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

முகாமில், பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, நேர்கானல் மூலம் படித்த இளைஞர்களை தேர்வு செய்கின்றனர். பொறியியல் படிப்பு, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, ஐ.டி.ஐ., ஆகிய படிப்பு படித்ததவர்களும் முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்பவர்கள், பயோடேட்டா, கல்வி தகுதிக்கான உண்மை சான்றிதழ் ஆகியவற்றை நேரில் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement