உலக விளையாட்டு செய்திகள்

பலே பல்கேரியா
உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஆண்களுக்கான (19 வயது)
உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் பல்கேரிய அணி 3-1 என்ற
கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. ஏற்கனவே அல்ஜீரியா, சீனாவை தோற்கடித்த
பல்கேரியா 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
அரையிறுதியில் ரடுகானு
அமெரிக்காவில் நடக்கும் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பிரிட்டனின் எம்மா ரடுகானு 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அமெரிக்கா அசத்தல்
உருகுவேயில் நடக்கும் பெண்களுக்கான பான் அமெரிக்கன் கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் அமெரிக்கா, மெக்சிகோ அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த அமெரிக்கா 10-0 என்ற கணக்கில், தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.
பிரேசில்-கொலம்பியா 'டிரா'
ஈகுவடாரில் நடக்கும் பெண்களுக்கான கோபா அமெரிக்கா கால்பந்து லீக் போட்டியில் பிரேசில், கொலம்பியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி, கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. பிரேசில் (10 புள்ளி), கொலம்பியா (8) அரையிறுதிக்கு முன்னேறின.
எக்ஸ்டிராஸ்
* மேகாலயாவில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஷில்லாங் லஜோங் அணி 6-0 என்ற கோல் கணக்கில் மலேசிய ஆயுதப்படை அணியை வீழ்த்தியது.
* ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் வரும் செப். 9-28ல் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கும் என, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது.
* பின்லாந்தில் நடக்கும் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல் 5-7, 2-6 என பிரான்சின் சாச்சா வேயன்பர்க்கிடம் தோல்வியடைந்தார்.
மேலும்
-
கங்கை கொண்ட சோழபுரம் புறப்பட்டார் மோடி; வழியெங்கும் உற்சாக வரவேற்பு
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?