திவ்யா-ஹம்பி 'டிரா' * உலக கோப்பை செஸ் பைனலில்...

பதுமி: திவ்யா-ஹம்பி மோதிய உலக கோப்பை செஸ் பைனலின் முதல் போட்டி 'டிரா' ஆனது.
ஜார்ஜியாவில் பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் பைனலுக்கு ஹம்பி 38, திவ்யா 19, என இரு இந்திய வீராங்கனைகள் முன்னேறி, புதிய வரலாறு படைத்தனர். தவிர, உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ், 2026) பங்கேற்கும் வாய்ப்பு பெற்றனர்.
இரண்டு போட்டி கொண்ட பைனல் நேற்று துவங்கியது. உலகத் தரவரிசையில் 18வது இடத்திலுள்ள திவ்யா, வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். 'நம்பர்-5' வீராங்கனை ஹம்பி, துவக்கத்தில் தடுமாற, 11வது நகர்த்தலில் திவ்யா முந்தினார். அடுத்தடுத்து செய்த தவறுகளால் சமநிலை ஏற்பட்டது. 3 மணி நேரம், 50 நிமிடம் நடந்த போட்டி, 41வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இருவரும் 0.5-0.5 என சம நிலையில் உள்ளனர்.
இன்று இரண்டாவது போட்டி நடக்கும். இதில் வெல்லும் இந்திய வீராங்கனை, உலக கோப்பை கைப்பற்றலாம். ஒருவேளை மீண்டும் 'டிரா' ஆனால், நாளை 'டை பிரேக்கரில்' வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார்.
நேற்று துவங்கிய மூன்றாவது இடத்துக்கான போட்டியில் சீன வீராங்கனைகள் லெய் டிங்ஜீ ('நம்பர்-3'), ஜோங்இ ('நம்பர்-8') மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் ஜோங்இ. 34வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆக, இருவரும் 0.5-0.5 என சமனில் உள்ளனர்.
மேலும்
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?
-
அமெரிக்காவில் 11 பேருக்கு கத்திக்குத்து; சந்தேக நபர் கைது