பாசிப்பயறில் அல்வா செய்யலாமா?

இனிப்பு என்றால், யாருக்குதான் பிடிக்காது. அதிலும் அல்வா என்ற பெயரை கேட்டாலே, நாவில் எச்சில் ஊறும். கேரட், பூசணிக்காய், பீட்ரூட் என பலவற்றில் அல்வா உண்டு. பாசிப்பயிறிலும் சுவையான அல்வா செய்யலாம்.

தேவையான பொருட்கள்  பாசிப்பயறு - 3 கப்

 நெய் - 3 கப்

 சர்க்கரை - 2 கப்

 பால் - 5 கப்

 ஏலக்காய் - கால் ஸ்பூன்

 குங்குமப்பூ - சிறிதளவு

 முந்திரிப்பருப்பு - ஒரு கைப்பிடி

 பாதாம், திராட்சை - தலா இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை பாசிப்பயறை இரவே கழுவி, நீரில் நனைத்து வைக்க வேண்டும். காலையில் தோல் நீக்கி சிறிது நீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, 2 கப் நெய் ஊற்றவும். காய்ந்ததும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பாசிப்பயறை போட வேண்டும். மிதமான தீயில் வைத்து கை விடாமல் நன்கு கிளறவும்.

நெய் தனியாக பிரியும் போது, சர்க்கரை, பால் சேர்த்து கிளறவும். மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். கலவை இறுகும் போது மிச்சமுள்ள நெய் ஊற்றி, ஏழு நிமிடம் கிளறவும். அதன்பின் குங்குமப்பூ, திராட்சை போடவும்.


வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய் துாள் துாவினால் சுவையான பாசிப்பயறு அல்வா ரெடி

- நமது நிருபர் - .

Advertisement