ஞாயிற்றுக்கிழமைக்கு சிக்கன் பொட்லி

பல்வேறு விதமான சிக்கன் வகைகளை ரசித்து, சுவைத்திருப்போம். இந்த வாரம் வித்தியாசமான, 'சிக்கன் பொட்லி'யை சமைத்து பார்ப்போம்.
செய்முறை 300 கிராம் சிக்கனை தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். கொத்துக்கறி போன்று சிறிது சிறிதாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
கால் கப் தயிர், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் துாள், கொஞ்சம் உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் துாள், கால் ஸ்பூன் கரம் மசாலாவை நன்றாக கலந்து, 15 நிமிடம் ஊற வைக்கவும்.
வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சேர்த்து வதக்கவும்.
ஒரு ஸ்பூன் இஞ்சி - பூண்டு பேஸ்ட், ஒன்றரை தக்காளி பேஸ்ட்டை சேர்ந்து இரண்டு நிமிடம் கலக்கவும்.
பின், ஊறவைத்த சிக்கனை அதில் போட்டு, மிதமான சூட்டில் எட்டு நிமிடங்கள் வேகவைக்கவும். இதனுடன் அரை எலுமிச்சையில் இருந்த எடுத்த பழச்சாறு, இரண்டு ஸ்பூன் வெண்ணெய், இரண்டு ஸ்பூன் பிரெஷ் கிரீம், அரை ஸ்பூன் கசூரி மேத்தி எனும் வெந்தயத்தின் உலர்ந்த இலைகளை சேர்க்கவும். சிக்கன் ஓரளவு வெந்த பின், அடுப்பை 'ஆப்' செய்து விடலாம்.
ஒரு கிண்ணத்தில் இரண்டு கப் மைதா மாவு, ஒரு ஸ்பூன் உப்பு, இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, சமோசா மாவு பதத்துக்கு பிசையவும்.
இதன் பின், 15 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். சப்பாத்தி மாவு பதத்தில் உருண்டை தயார் செய்து, உள்ளங்கை அளவுக்கு தட்டி எடுத்து கொள்ளவும்.
இதில் சிக்கன் ஸ்டப்பிங் செய்து, உங்களுக்கு தேவையான வடிவில் வைத்து கொள்ளவும். வாணலியில் கடலெண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் பொறித்து எடுக்கவும்.
இது தான் ஞாயிற்றுக்கிழமை சாப்பிடக்கூடிய 'சிக்கன் பொட்லி
- நமது நிருபர் - '.
மேலும்
-
உலக அளவில் வலிமையான சக்தியாக மாறி வரும் இந்திய ராணுவம்; கார்கில் வெற்றி தினத்தில் ராணுவ தளபதி பெருமிதம்
-
சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது; மத்திய அரசு அறிவிப்பு
-
அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்: தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது சுப்ரீம் கோர்ட்
-
சர்ச்சைகளால் தலைப்புச் செய்தியாகும் எம்.பி.,க்கள்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வருத்தம்
-
நிலுவையில் ரூ.63,000 கோடி குடிநீர் வரி; திணறும் டில்லி அரசு
-
ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 8 பேர் உயிரிழப்பு