பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ராமேஸ்வரம்: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா- வங்கதேசம் இடையே மையம் கொண்டுள்ளது. இதன்காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்தது.
இந்த தொலைதுார வானிலை எச்சரிக்கையால் நேற்று பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதன் மூலம் இப்பகுதியில் நிறுத்தியுள்ள படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தடை விதிப்பு: இன்று பாக்ஜலசந்தி கடலில் சூறாவளி வீசி கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலை எழும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.
மேலும்
-
மான்செஸ்டரில் படுமோசம்; 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொதப்பிய இந்திய அணி
-
உலக அளவில் வலிமையான சக்தியாக மாறி வரும் இந்திய ராணுவம்; கார்கில் வெற்றி தினத்தில் ராணுவ தளபதி பெருமிதம்
-
சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது; மத்திய அரசு அறிவிப்பு
-
அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்: தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது சுப்ரீம் கோர்ட்
-
சர்ச்சைகளால் தலைப்புச் செய்தியாகும் எம்.பி.,க்கள்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வருத்தம்
-
நிலுவையில் ரூ.63,000 கோடி குடிநீர் வரி; திணறும் டில்லி அரசு