சமூக ஊடகங்களை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர்; சுப்ரீம்கோர்ட் அதிருப்தி

8


புதுடில்லி: ''சமூக ஊடகங்களை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர்'' என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.


பெண் அரசியல்வாதி ஒருவரை விமர்சித்து யூடியூப் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கேரளா பத்திரிகையாளருக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு, இன்று (ஜூலை 26) நீதிபதிகள் நாகரத்னா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பெண் அரசியல்வாதி ஒருவரை விமர்சித்து யூடியூப் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கேரள பத்திரிகையாளருக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நீதிபதிகள் கூறியதாவது:


* யூடியூப் வீடியோக்கள் நீதிமன்ற செயல்முறைக்கு மாற்றாக இருக்க முடியாது.


* தீர்ப்பு வழங்குவதற்கு நீதிமன்றங்கள் உள்ளன. யூடியூப் வீடியோ மூலம் கருத்தை திணிக்க முடியாது.


* யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர்.


* சமூக வலைதளங்களில் பேசப்படும் எதிர்மறையான விஷயங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

* ஊழல் எதிர்ப்பு பெயரில் யாருடைய புகழையும் பாதிக்கும் வகையில் செயல்பட முடியாது.
விமர்சிப்பது சட்டத்தின் கண்ணோட்டத்தில் தவறானது.



* ஊழலை எதிர்ப்பதாக கூறி அவதூறு கருத்து பரப்ப சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement