கோப்பை வென்றது நியூசிலாந்து: தென் ஆப்ரிக்கா அதிர்ச்சி

ஹராரே: முத்தரப்பு 'டி-20' பைனலில் அசத்திய நியூசிலாந்து அணி, 3 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி கோப்பை வென்றது.
ஜிம்பாப்வேயில், முத்தரப்பு 'டி-20' தொடர் நடந்தது. ஹராரேயில் நடந்த பைனலில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் வான் டெர் துசென், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பெர்ட் (30), கான்வே (47), ரச்சின் ரவிந்திரா (47) கைகொடுத்தனர். நியூசிலாந்து அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 180 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு லுவான் பிரிட்டோரியஸ் (51) அரைசதம் விளாசினார். ரீசா ஹென்டிரிக்ஸ் (37), கேப்டன் துசென் (18) ஆறுதல் தந்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. மாட் ஹென்றி பந்துவீசினார். முதல் பந்தை வீணடித்த பிரவிஸ் (31), 2வது பந்தில் அவுட்டானார். அடுத்த இரண்டு பந்தில், 3 ரன் கிடைத்தது. ஐந்தாவது பந்தில் ஜார்ஜ் லிண்டே (10) அவுட்டாக, ஒரு பந்தில் 4 ரன் தேவைப்பட்டது. இதனை செனுரன் முத்துசாமி வீணடித்தார்.
தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 177 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.