இந்தியாவுக்கு 2 வெண்கலம்: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்

சோலோ: ஆசிய ஜூனியர் பாட்மின்டன் ஒற்றையரில் இந்தியாவின் தன்வி சர்மா, வெண்ணாலா வெண்கலம் வென்றனர்.

இந்தோனேஷியாவில், ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தன்வி சர்மா, சீனாவின் யின் யி குயிங் மோதினர். 35 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய தன்வி 13-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றார்.

மற்றொரு அரையிறுதியில் இந்திய வீராங்கனை வெண்ணாலா கலகோட்லா, சீனாவின் லியு சி யா மோதினர். 37 நிமிடம் வரை சென்ற போட்டியில் ஏமாற்றிய வெண்ணாலா 15-21, 18-21 என தோல்வியடைந்து வெண்கலத்தை கைப்பற்றினார்.
உலக ஜூனியர் பாட்மின்டன் வரலாற்றில், ஒரு சீசனில் இரண்டு இந்திய வீராங்கனைகள் ஒற்றையரில் பதக்கம் வென்று வரலாறு படைத்தனர்.

Advertisement