சாத்விக்-சிராக் ஜோடி ஏமாற்றம்: சீன ஓபன் பாட்மின்டனில்

சாங்சூ: சீன ஓபன் பாட்மின்டன் அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி தோல்வியடைந்தது.
சீனாவில், 'சூப்பர் 1000' சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா, சோ வூய் யிக் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 13-21 என இழந்த இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 17-21 எனக் கோட்டைவிட்டது. முடிவில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 13-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. இது, ஆரோன்-சோ ஜோடிக்கு எதிராக சாத்விக்-சிராக் ஜோடியின் 11வது தோல்வியானது. மலேசிய ஜோடிக்கு எதிராக 14 முறை மோதிய போட்டியில், 3ல் மட்டுமே இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

Advertisement