அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அதிர்ந்து போன அந்தமான்!

சென்னை: அந்தமான் கடலோர பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.



அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் உள்ள அந்தமான் கடலோரங்களில் அவ்வப்போது பயங்கர நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று அங்குள்ள அந்தமான் பகுதியில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது.


ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.9 ஆக பதிவாகி இருப்பதாக அந்நாட்டு தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதிப்படுத்தி, அறிவித்து உள்ளது. இந்த மாதத்தில் நிகழ்ந்துள்ள 2வது நிலநடுக்கம் ஆகும்.


ஜூலை 13ம் தேதி இதே அந்தமான் பகுதியில் 4.7 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் பிறகே தற்போது தான் நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது.


ஒரே மாதத்தில் 2 முறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தொடர் நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்படவில்லை. இன்றைய நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக ஏதேனும் பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டு உள்ளனவா என்பது பற்றிய எந்த தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Advertisement