குருகிராமில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் கைது
குருகிராம், ஜூலை 26-
குருகிராம் சுற்றுப்புறங்களில் சட்ட விரோதமாக தங்கியிருந்த எட்டு வங்கதேசத்தவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, இந்திய ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
டில்லி அருகே உள்ள குருகிராம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் போலீசார் மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகள், வீடு வீடாக தீவிர சோதனை நடத்தி, வெளிநாட்டினர் பலரை கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில், குரு கிராம் பகுதியில் வீட்டு வேலை செய்பவர்கள், தெருவோர கடைக்காரர்கள், வாடகைக்கு குடியிருப்போர் மற்றும் குடிசைகளில் குடியிருப்போரிடம் ஆவணங்களை பெற்று அதிகாரிகள் சோதனை செய்கின்றனர்.
அந்த வகையில், தாங்கள் குடியிருக்கும் வாடகை வீடுகளின் அடிப்படையில் ஆதார் மற்றும் பிற ஆவணங்களை பெற்றுள்ள வங்கதேசத்தவர் எட்டு பேரை, போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆவணங் களையும் வைத்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும், எல்லையில் அமைக்கப்பட்டுள்ள குடியேற்றத்துறை முகாமுக்கு அனுப்பி, அங்கிருந்து வங்கதேசத்திற்கு விரைவில் நாடு கடத்த உள்ளனர்.
அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 250 வங்கதேசத்தவர் உள்ளிட்ட பிற நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.