தறி கெட்டு ஓடிய ஆம்னி பஸ்: ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்

கோவை: கோவையில் கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ் மோதி பல வாகனங்களில் மோதி ஒருவர் பலியானார். ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
கோவை காந்திபுரத்திலிருந்து பெரம்பலுாருக்கு, ஆம்னி பஸ் நேற்று இரவு, 7:00 மணிக்கு, 31 பயணியருடன் புறப்பட்டு சென்றது. அவிநாசி சாலை சிட்ரா அருகே செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் முன்னால் சென்ற ஒரு ஸ்கூட்டர், இரு பைக்குகள் மீது மோதியது.
தொடர்ந்து அவ்வழியே வந்த இரு கார்கள் மீதும் மோதியது. பின், சின்னியம்பாளையம், மாரியம்மன் கோவில் அருகே சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதி நின்றது. இதில், அந்த லாரி, டூவீலர் ஒன்றின் மீது மோதியது.
இவ்விபத்தில் பஸ்சில் இருந்த ஒரு பெண் உள்பட இருவர், கார்களில் பயணித்த ஐந்து பேர், இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் என, எட்டு பேர் படுகாய மடைந்தனர்.
அனைவரும் அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் காரில் பயணித்த சோமனுாரை சேர்ந்த சுந்தர்ராஜ், 54 என்பவர் உயிரிழந்தார்.
இவ்விபத்தால், அவிநாசி சாலை கொடிசியா முதல் சின்னியம்பாளையம் வரை கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய பஸ் டிரைவரை தேடுகின்றனர்.

மேலும்
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?
-
அமெரிக்காவில் 11 பேருக்கு கத்திக்குத்து; சந்தேக நபர் கைது
-
லாரிடயர்கள் திருடிய மூவர் கைது
-
நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க கலெக்டர் அறிவுரை
-
மக்கள் மன்றம் நிகழ்ச்சி