'கொலைகள் அதிகரிப்புக்கு மணல் கொள்ளையே காரணம்'

சென்னை: 'மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது, தி.மு.க., அரசு, மென்மையான போக்கை கடைப்பிடித்து வருவதுதான், கொலைகள் அதிகரிக்க வழி வகுக்கிறது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
துாத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கடற்கரையில், 'பொக்லைன்' இயந்திரங்கள் பயன்படுத்தி மண் எடுக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த முடியனுார், தென்பெண்ணை ஆற்றில், இரவு நேரங்களில், பல மீட்டர் ஆழத்திற்கு, மணல் எடுத்து கடத்தப்படுகிறது.
கரூர் மாவட்டம் வாங்கலில், காவிரி கரைப்பகுதியில், தனியார் இடத்தில் மணல் அள்ளியபோது, இடத்தின் உரிமையாளர் தட்டிக் கேட்டதில், ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் , ஆவுடையார்கோவில், காமராஜர் பகுதியை சேர்ந்த இருவர், மணல் கடத்தல் தொடர்பாக, கொல்லப்பட்டனர்.
தமிழகத்தில் மணல் கடத்தலும், அதனால், படுகொலைகள் நடப்பதும் சாதாரணமாகி விட்டது.
மணல் கொள்ளையில் ஈடுபடுவோரை, தி.மு.க., அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்காமல், மென்மையான போக்கை கடைப்பிடிப்பதே, கொலைகள் அதிகரிக்க காரணம்.
தி.மு.க.,வின் முக்கிய அரசியல் புள்ளிகள், மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
கங்கை கொண்ட சோழபுரம் புறப்பட்டார் மோடி; வழியெங்கும் உற்சாக வரவேற்பு
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?