தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?

51


சென்னை: தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் 5 கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சார்பில் தமிழக அரசின் கோரிக்கை மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

அதன் விபரம் பின்வருமாறு:


* சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும். தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ.2,121.59 கோடியை விடுவிக்க வேண்டும். மத்திய அரசு நிதி வழங்காமல் இருப்பது லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது.

* ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் உள்ள ரயில்வே திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.



* கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ரூ.10.740 கோடியில் 34.8 கி.மீ தூரத்தில் அமைய உள்ள கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும். ரூ.11,368 கோடியில் 32 கி.மீ., தூரத்திற்கு அமைய உள்ள மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்.


* 2025-26ம் ஆண்டிற்கான முதல் தவணை நிதியை விரைவாக வழங்க வேண்டும்.


* இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் பாரம்பரிய மீன்படி உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு 5 கோரிக்கை மனுக்கள் பிரதமர் மோடியிடம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.

Advertisement