அமெரிக்காவில் 11 பேருக்கு கத்திக்குத்து; சந்தேக நபர் கைது

6


வாஷிங்டன்: அமெரிக்காவின் மிக்சிகனில் உள்ள வால்மார்ட் கடையில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.


அமெரிக்காவின் வடக்கு மிச்சிகனில் உள்ள டிராவர்ஸ் நகரில், வால்மார்ட் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் சரமாரியாக கத்தியில் குத்தினார். இந்த சம்பவத்தில், 11 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார். அவர் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



தாக்குதல் நடத்தியவர் ஏதேனும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரா என்று போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், வெளிநாட்டு அவர்களுக்கு எதிராக இணையத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

''இந்த மிருகத்தனமான வன்முறைச் செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என
மிச்சிகன் கவர்னர் கிரெட்சன் விட்மர் தெரிவித்துள்ளார்.

Advertisement