ஏ.வி.பி., சி.பி.எஸ்.இ., பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் துவக்கம்

திருப்பூர், : திருப்பூர், காந்தி நகர் ஏ.வி.பி., - சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில், ரோட்டரியின் மாணவர் அமைப்பான இன்ட்ராக்ட் கிளப் துவக்க விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்ற விழாவில், திருப்பூர் மாவட்ட இன்ட்ராக்ட் அமைப்பு தலைவர் எழில்வாணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதில் பள்ளியின் இன்ட்ராக்ட் கிளப் தலைவராக மாணவர் முகமது ரிஜான்; செயலாளர் தியாஜெயப்பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றனர். விழாவில், ஏ.வி.பி., குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். செயலாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ராஜேஷ், ஒருங்கிணைப்பாளர் மோகனா ஆகியோர் செய்திருந்தனர். கலைநிகழ்ச்சிகளை நித்யா, கண்மணி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், ரோட்டரி அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?
-
அமெரிக்காவில் 11 பேருக்கு கத்திக்குத்து; சந்தேக நபர் கைது