வறுமையால் குழந்தையை விற்க முயன்ற தாய் உட்பட மூன்று பேர் கைது

சென்னை, குழந்தையை விற்க முயன்ற தாய் உட்பட மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
புழல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 32; இ - சேவை மையத்தில் பணிபுரிகிறார். நான்கு மாதங்களுக்கு முன், புழல், கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த தீபா என்பவர் அறிமுகமானார்.
தீபாவிடம் அவரது தோழியரான வித்யாராணி மற்றும் ரதிதேவி ஆகியோர், 'குழந்தையை யாரிடமாவது விற்றுத்தர முடியுமா?' எனக் கேட்டுள்ளனர்.
இது குறித்து, கார்த்திக் என்பவரிடம் தீபா தெரிவித்து உள்ளார். உண்மை அறிய, கார்த்திக் வித்யாராணியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வித்யாராணி 12 லட்சம் ரூபாய் பேரம் பேசியுள்ளார்.
இது குறித்து புழல் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
புழல் போலீசாரின் விசாரணையில், வித்யா ராணியின் தோழியான ரதிதேவி, கணவர் துணையின்றி குழந்தையுடன் வறுமையில் வாழ்ந்து வந்ததும், அதனால் குழந்தையை விற்க முயன்றதும் தெரிய வந்துது.
இதையடுத்து வித்யாராணி, 36, தீபா, 38, மற்றும் ரதிதேவி, 40, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விற்பனைக்கு கொண்டு வந்த 2 வயது ஆண் குழந்தையையும், வித்யாராணி வீட்டில் இருந்த மற்றொரு 2 வயது குழந்தையையும் போலீசார் மீட்டு, குழந்தைகள் நல குழும அலுவலரிடம் ஒப்படைத்து, குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெண்களிடமிருந்து ஐந்து மொபைல் போன்கள், இரண்டு டூ - வீலர் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் வேறு யார் யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும்
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?
-
அமெரிக்காவில் 11 பேருக்கு கத்திக்குத்து; சந்தேக நபர் கைது