'ரேபிடோ' பைக்கில் பயணித்த மூதாட்டி தவறி விழுந்து பலி
தாம்பரம், பழவந்தாங்கலை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 45. 'ரேபிடோ' பைக் டாக்ஸி ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, பழவந்தாங்கலில் இருந்து, தனது 'பஜாஜ் பிளாட்டினா' இருசக்கர வாகனத்தில், பெண் பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு முடிச்சூருக்கு சென்றார்.
அங்கு அந்த பயணியை இறக்கிவிட்டு, சாவித்ரி, 60, என்ற மூதாட்டியை ஏற்றிக்கொண்டு, தாம்பரம் நோக்கி வந்தார்.
மேற்கு தாம்பரம், சி.டி.ஓ., காலனி அருகே வந்த போது, இருசக்கர வாகனத்தில் அமர்ந்து வந்த மூதாட்டி, நிலை தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார்.
இதில், இடது கண், இடது பக்க பின்தலையில் காயம் ஏற்பட்டு, சுயநினைவை இழந்தார். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், மூதாட்டி ஏற்கனவே இறந்தது தெரிந்தது.
உடலை கைப்பற்றிய போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
கங்கை கொண்ட சோழபுரம் புறப்பட்டார் மோடி; வழியெங்கும் உற்சாக வரவேற்பு
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?