போலீஸ்காரர் பைக்கில் பெட்ரோல் திருட்டு
அண்ணா நகர்,போலீஸ்காரரின் இருசக்கர வாகனத்தில், பெட்ரோல் திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டான்.
புதுப்பேட்டை, நரியங்காடு போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரீகன், 33. இவர், ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிகிறார்.
அலுவல் பணிக்காக, கிழக்கு அண்ணா நகர் பகுதியில், ரீகன் தன் 'பஜாஜ் பல்சர் 220' வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளார். பின், நேற்று முன்தினம் அதிகாலை வந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத இருவர், வாகனத்தில் பெட்ரோல் திருடிக்கொண்டிருந்தனர்.
அவர்களை பிடிக்க முயன்றபோது, ஒருவர் தப்பியோடவே மற்றொருவர் சிக்கினார். அவரை அண்ணா நகர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், நண்பருடன் சேர்ந்து பெட்ரோல் திருடியதும் தெரிய வந்தது. போலீசார் சிறுவனை கைது செய்து, சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?
-
அமெரிக்காவில் 11 பேருக்கு கத்திக்குத்து; சந்தேக நபர் கைது
Advertisement
Advertisement