எழும்பூர் மருத்துவமனை விடுதியில் 3 வேளை இலவச உணவு ஏற்பாடு
சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்படும் உறவினர்கள் தங்கும் விடுதியில், மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டடம், விடுதி கட்டட பணியை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
மருத்துவமனையில், 82,000 சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் கூடிய மருத்துவமனை கட்டடம், 53 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. 100 படுக்கை வசதி உடைய இம்மருத்துவமனை, அக்., மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
அதேபோல், கிராமப்புறங்களில் இருந்து வரும் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தங்கள் குழந்தைகளின் சிகிச்சைக்கு தங்க இடம் இல்லாமல், பல்வேறு இடங்களில் தங்கும் சூழல் உள்ளது.
அதனால், கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாளையொட்டி மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு திரட்டப்பட்ட நிதி 1.22 கோடி ரூபாயுடன் சேர்த்து 5.81 கோடி ரூபாயில் தங்கும் விடுதி கட்டப்படுகிறது. இப்பணியும் முடியும் தருவாயில் உள்ளது. இந்த விடுதியில், 100 பேர் வரை தங்க முடியும்.
இதில் தங்குவோருக்கு, சமூக பொறுப்பு நிதி மூலம், இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க உள்ளது.
இவ்வாறு அமைச்சர் சுப்பிரமணியின் கூறினார்.
மேலும்
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?
-
அமெரிக்காவில் 11 பேருக்கு கத்திக்குத்து; சந்தேக நபர் கைது