முதல்வர் கோப்பை விளையாட்டு ஆக., 16க்குள் பதிவு செய்யலாம்
சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை மாவட்டம் சார்பில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், ஆக., 22ல் துவங்கி, செப்., 12ம் தேதி வரை நடக்க உள்ளன.
இந்தாண்டிற்கான போட்டியில், பல்வேறு புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு, பள்ளி, கல்லுாரி, பொது மற்றும் அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவுகளில் இருபாலருக்கும் நடக்க உள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுவோருக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
பள்ளி அளவில், 19 வயதுக்குட்பட்டோரும், கல்லுாரியில் 25 வயதுக்கு உட்பட்டோரும் பங்கேற்கலாம். பொதுப் பிரிவில், 15 - 35 வயது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு கிடையாது.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர், https://cmtrophy.sdat.in மற்றும் amp;https://sdat.tn.gov.in ஆகிய இணையதளங்களில் ஆக., 16ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். விபரங்களுக்கு, 74017 03480 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
கங்கை கொண்ட சோழபுரம் புறப்பட்டார் மோடி; வழியெங்கும் உற்சாக வரவேற்பு
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?