வேலை வாய்ப்பு முகாமில் 412 பேருக்கு வேலை

சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

தேர்வான இளைஞர்களுக்கு கலெக்டர் பொற்கொடி தலைமையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ., தமிழரசி முன்னிலை வகித்தார். 2 ஆயிரத்து 95 இளைஞர்கள் பதிவு செய்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர்.

இதில் தேர்வான 412 இளைஞர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் நளதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement