மேல்மருவத்துாரில் வாலிபால் போட்டி

சித்தாமூர்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வட்டார அளவிலான பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி நடந்தது.

இதில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 20 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். நாக் அவுட் முறையில் நடந்த போட்டியில், யு-14 வயது பிரிவு இறுதிப்போட்டியில் கடப்பாக்கம் கே.வி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஒரத்தி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை வீழ்த்தினர்.

யு-17 வயது பிரிவு இறுதிப்போட்டியில் கடப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், , கடப்பாக்கம் கே.வி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை வீழ்த்தினர்.

யு-19 வயது பிரிவு இறு திப்போட்டியில் கடப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை வீழ்த்தி, சூணாம்பேடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

Advertisement