தரம் உயரும் எட்டுபோலீஸ் ஸ்டேஷன்கள்
தேனி: மாவட்டத்தில் வீரபாண்டி, கண்டமனுார், குமுளி உள்ளிட்ட 8 போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர்கள் நிலையில் தரம் உயர்த்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம் என 5 சப்டிவிஷன்கள் உள்ளன. இந்த சப்டிவிஷன்களில் 5 மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உட்பட 36 போலீஸ் ஸ்டேஷன்கள், இரு மதுவிலக்கு பிரிவு, ஒரு மாவட்ட குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர்கள் இன்றி இரு சப் இன்ஸ்பெக்டர்கள், 28 போலீசாருடன் இயங்குகின்றன.
இந்த போலீஸ் ஸ்டேஷன்களான வீரபாண்டி, க.விலக்கு, ஜெயமங்கலம், கூடலுார் தெற்கு, ஓடைப்பட்டி, கண்டமனுார், ராயப்பன்பட்டி, குமுளி ஆகிய 8 ஸ்டேஷன்களுக்கு தனி இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட உள்ளன. தரம் உயர்த்திய பின் ஒரு இன்ஸ்பெக்டர், இரு எஸ்.ஐ.,க்கள், 45க்கும் மேற்பட்ட போலீசார் என ஒரு ஸ்டேஷனில் 50 பேர் பணிபுரிவார்கள் என போலீசார் கூறினர். கூடுதல் போலீசார் பணிபுரிவதன் மூலம் வழக்குகள் விசாரணை விரைந்து மேற்கொள்ள வழிவகுக்கும்.
மேலும்
-
கங்கை கொண்ட சோழபுரம் புறப்பட்டார் மோடி; வழியெங்கும் உற்சாக வரவேற்பு
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?