இருக்கு... ஆனா இல்லை! இடைநிலை ஆசிரியர் காலியிடம்... கோவையில் தொடரும் பற்றாக்குறை
கோவை : கோவை மாவட்ட அரசு பள்ளிகளில், தற்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இல்லை என்பதால், சமீபத்தில் வழங்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் நியமன ஆணைகளில், மாவட்டத்திற்கு ஒருவரும் நியமிக்கப்பட வில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், மாவட்டத்தில் காலிப் பணியிடங்கள் இருப்பதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும், 2024-25 கல்வியாண்டில், 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இருப்பதால், அவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, 2026 ஜனவரிக்குள் 19 ஆயிரத்து 260 இடைநிலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வாயிலாக நியமிக்கப்படுவர் என அரசு அறிவித்தது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும், 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 24ல், பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள, 781 ஆரம்பப் பள்ளிகள், 232 நடுநிலைப் பள்ளிகள், 83 உயர்நிலைப் பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை, சூலுார், பொள்ளாச்சி (வடக்கு மற்றும் தெற்கு) உள்ளிட்ட ஒன்றியங்களில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, வால்பாறை யில், 42 காலிப்பணியிடங்கள் உள்ளதாக ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
@quote@ கோவை உட்பட, 16 மாவட்டங்களில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 23 மாவட்டங்களில் மட்டுமே, ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும், ஐந்தாயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளன. மாணவர்களின் கற்றல் திறன் தொடக்கக் கல்வியில் இருந்து தொடங்குவதால், போதுமான அளவில் ஆசிரியர்களை நியமனம் செய்வது மிகவும் அவசியம். - அரசு, மாநிலத் தலைவர், தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டமைப்புquote
மேலும்
-
காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
-
ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு விபத்து; 3 பேர் பலி; 34 பேர் படுகாயம்!
-
ந.வைரவன்பட்டியில் இன்று தேரோட்டம்
-
சமுதாயக்கூடமின்றி கிராமத்தினர் அவதி
-
மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை லால்பாக் பூங்காவில் திறப்பு
-
தமிழாசிரியர் கழக கூட்டம்