சமுதாயக்கூடமின்றி கிராமத்தினர் அவதி

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சமுதாயக்கூடம் இல்லாமல் கிராமத்தினர் அவதிப்படுகின்றனர்.

எஸ் புதூர் ஒன்றியம் பூசாரிபட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதி மக்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த மண்டபமோ, சமுதாயக்கூடமோ இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

இதனால் பக்கத்து ஊர்களில் உள்ள தனியார் மண்டபங்களில் அதிக வாடகை கொடுத்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியுள்ளது.

ஒரு சிலர் கூடுதல் செலவில் செட் அமைத்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். தங்கள் கிராமத்திற்கு சமுதாய கூடம் கட்டித் தர பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.

எனவே விரைந்து சமுதாயக்கூட கட்டட கட்டித் தர வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement