தமிழாசிரியர் கழக கூட்டம்

சிவகங்கை : சிவகங்கையில், தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் ராம்குமார் வரவேற்றார். மாநில தலைவர் சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பொது செயலாளர் நாகேந்திரன், அமைப்புச் செயலாளர் ராசாஆனந்தன் பங்கேற்றனர்.

சிவகங்கை அரசு அருங்காட்சியகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும். தமிழ் பாடத்தை முதன்மை பாடமாக வைக்க வேண்டும் என தீர்மானித்தனர். மாவட்ட பொருளாளர் திருப்பதி நன்றி கூறினார்.

Advertisement