டூவீலர் மோதி செக்போஸ்டில் இருந்த போலீஸ்காரர் காயம்

ஆண்டிபட்டி: கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன் 38, ஆண்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் இவர் திம்மரசநாயக்கனூர் செக்போஸ்டில் இரவு பணியில் இருந்தார்.

இவருடன் கண்டமனூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ராஜ்குமாரும் இருந்துள்ளார்.

நேற்று முன் தினம் அதிகாலையில் இருவரும் வாகன கண்காணிப்பில் இருந்தனர்.

அப்போது ஆண்டிபட்டியில் இருந்து மதுரை நோக்கி டூவீலரில் சென்ற நபர் அறிவழகன் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.

விபத்து நடந்ததும் டூவிலரில் வந்த மற்றொரு நபர் விபத்து ஏற்படுத்தியவரை உடன் அழைத்துச் சென்று விட்டார்.

போலீஸ்காரர் அறிவழகன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விபத்து ஏற்படுத்தி டூவீலரில் தப்பி சென்ற இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement