இ.எஸ்.ஐ., திட்டத்தில் அதிகபட்ச பயன்பாடு தொழிலாளர் மத்தியில் விழிப்புணர்வு

திருப்பூர் : 'அதிகபட்ச பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில், தொழிலாளர் மத்தியில் இ.எஸ்.ஐ., திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என, இ.எஸ்.ஐ., அதிகாரிகள் பேசினர்.
தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ., ) , திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், 'ஸ்ப்ரீ -25' திட்டம் குறித்த, விழிப்புணர்வு முகாம், ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின், உறுப்பினர் சேர்க்கை துணை குழு தலைவர் சிவசுப்பிரமணியம் வரவேற்றார். இ.எஸ்.ஐ., திட்ட அதிகாரிகள், தொழிலாளர் மற்றும் தொழிற்சாலைகளுக்கான திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். பனியன் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., திட்டம் மிக முக்கியமானது.
இ.எஸ்.ஐ., திட்டத்தில், சந்தா தொகை பிடித்தம் செய்வது மட்டும் தெரிகிறது; அத்திட்டத்தில் உள்ள பல்வேறு சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; மருத்துவமனை பயன்பாட்டையும் ஊக்குவிக்க வேண்டுமென, ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தினர்.
கோவை இ.எஸ்.ஐ., உதவி இயக்குனர் பெருமாள் பேசியதாவது:
இ.எஸ்.ஐ., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள, 'ஸ்ப்ரீ - 25' திட்டம், நடப்பு ஜூலை மாதம் துவங்கி, டிச., மாதம் வரை நடைமுறையில் இருக்கும்.
இத்திட்டத்தின் மூலமாக, தொழிலாளர்களும், தொழிற்சாலைகளும், புதிதாக பதிவு செய்துகொள்ளலாம். முந்தைய காலகட்டம் தொடர்பான விசாரணையோ, அபராதமோ இருக்காது.
இ.எஸ்.ஐ., திட்டத்தில் கிடைக்கும் பயன்கள் குறித்து, தொழிலாளருக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. அதிகபட்ச பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில், தொழிலாளர் மத்தியில் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மருத்துவ பராமரிப்பு, மகப்பேறு, இயலாமை நோய், வேலையின்மை, வேலையில் காயம், தொழிலாளி மரணம் மற்றும் விதவை சலுகை என, இ.எஸ்.ஐ., மூலமாக, பல்வேறு நல உதவிகளும் வழங்கப்படுகிறது.
இ.எஸ்.ஐ., தொழிலாளரின் குழந்தைகளுக்கு, மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் பி.எஸ்.சி., நர்சிங் படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில், துணை குழுவின் துணை தலைவர் ரத்தினசாமி, திருப்பூர் இ.எஸ்.ஐ மேலாளர் இந்திரலேகா, கிளை மேலாளர் நித்யா., ஏற்றுமதி நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, 'ஸ்ப்ரீ -25'திட்ட பயன்பாடு குறித்த சந்தேகங்களுக்கு, இ.எஸ்.ஐ., அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
@block_B@ 24 மணி நேர மகப்பேறு சேவை தொழிலாளர் நலன் கருதியே, திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் பயன்பாடு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில், உலக தரம் வாய்ந்த கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இ.எஸ்.ஐ., திட்டத்தில், அதிக டாக்டர்கள் நியமிக்கப்படுகின்றனர். இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில், 24 மணி நேரமும் மகப்பேறு பராமரிப்பை வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட ஐ.சி.யு., பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டாம் நிலை நோய்களுக்கான சிகிச்சையும் வழங்கப்படுகிறது; வாராந்திர மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது. - டாக்டர் ராஜசேகரன் திருப்பூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரிblock_B
மேலும்
-
காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
-
ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு விபத்து; 3 பேர் பலி; 34 பேர் படுகாயம்!
-
ந.வைரவன்பட்டியில் இன்று தேரோட்டம்
-
சமுதாயக்கூடமின்றி கிராமத்தினர் அவதி
-
மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை லால்பாக் பூங்காவில் திறப்பு
-
தமிழாசிரியர் கழக கூட்டம்