'மக்களுக்கு ஒரு சிகிச்சை; முதல்வருக்கு ஒரு சிகிச்சை?'

5

துாத்துக்குடி: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை அளித்த பேட்டி:


தமிழகத்திற்கு மத்திய பா.ஜ., அரசு எதுவுமே செய்யவில்லை என வீடு, வீடாகச் சென்று சொல்லுமாறு தி.மு.க.,வினரிடம் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.


பிரதமர் மோடியின், தற்போதைய வருகையில் மட்டும், தமிழகத்துக்கு 4800 கோடி ரூபாய் திட்டப் பணிகளை வழங்கி இருக்கிறார். இதை வீடு, வீடாகச் சென்று தி.மு.க.,வினர் சொல்வார்களா?


பிரதமர் மோடி, பாரபட்சம் இல்லாமல் திட்டங்களை கொடுக்கிறார். ஆனால், 'உங்களுடன் ஸ்டாலின்' என தி.மு.க.,வினர் மக்களை ஏமாற்றுகின்றனர்.




கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், ஊர் ஊராக சென்று மக்களிடம் ஸ்டாலின் வாங்கிய 14 லட்சம் மனுக்கள், பெட்டிக்குள் துாங்குகின்றன. பிரதமர் மோடி வந்த பிறகுதான், கங்கைகொண்ட சோழபுரத்தின் மீது, கவனம் திரும்பி உள்ளது.



சுகாதாரத் துறை சிறப்பாக இருப்பதாக அந்த துறையின் அமைச்சர் கூறுகிறார். அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இருக்கிறது என்றால், முதல்வர் ஸ்டாலின், தனியார் மருத்துவமனைக்கு சென்றது ஏன்? மக்களுக்கு ஒரு சிகிச்சை, முதல்வருக்கு ஒரு சிகிச்சையா?



தமிழகத்தில் 38 மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும், நீரிழிவு நோய்க்கான டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள், மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.



சுகாதாரத்துறை அமைச்சர், 'கிட்னி திருட்டு நடக்கவில்லை. அது ஒரு முறைகேடு' என்கிறார். நம் வீட்டுக்கு திருடன் வந்தால், 'திருட்டு நடக்கவில்லை; முறைகேடாக எடுத்து சென்று விட்டான்' எனக் கூறுவோமா?



தமிழகத்தில் பாலியல், கொலை, கொள்ளை, கிட்னி திருட்டு என, எல்லாவற்றிலும் தி.மு.க., வினருக்கு பங்கு உள்ளது. இவ்வாறு கூறினார்.

Advertisement