புதிய காய்கறி மார்க்கெட் திறக்க நகராட்சி வணிக வளாகம் இடிப்பு
சிதம்பரம் : சிதம்பரம் காய்கறி மார்க்கெட்டின் முகப்பில் இருந்த நகராட்சி வணிக வளாகம் இடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சிதம்பரம், வடக்கு மெயின்ரோட்டில் உள்ள அண்ணாதுரை கலையரங்கத்தின் முகப்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சியின் வணிக வளாகத்தில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலவீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அங்கு இயங்கி வரும் காய்கறி மார்க்கெட் அண்ணாதுரை கலையரங்க இடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 6 கோடி ரூபாய் மதிப்பில் புதிய காய்கறி மார்க்கெட் கட்டுமான பணிகள் துவங்கி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
புதிய காய்கறி மார்க்கெட்டிற்கு பொருட்களை இறக்க வரும் கனரக வாகனங்கள் வந்து திரும்பும் வகையில், முகப்பில் இருந்த வணிக வளாகத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வணிக வளாகம் இடிக்கும் பணிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது.
இதன் காரணமாக வணிக வளாகத்தில் உள்ள வியாபாரிகளுக்கு மார்க்கெட்டின் உள்பகுதியில் கடைகள் கட்டி கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் புதிய காய்கறி மார்க்கெட் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும்
-
ஆபத்தில் முடிந்த அதிவேக பயணம்: நொய்டாவில் கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி
-
வேலை தேடி துபாய் சென்ற ஹைதராபாத் பெண்; போதைப்பொருள் வழக்கில் கைது
-
முதலாம் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி!
-
ஓலைச்சுவடிகளில் கொட்டிக்கிடக்கும் அறிவுச்செல்வம்; பாதுகாக்கும் தஞ்சை மணிமாறனுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
-
கங்கை தீர்த்தம் கொண்டு வந்த மோடி; சோழீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்