ஆபத்தில் முடிந்த அதிவேக பயணம்: நொய்டாவில் கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி

நொய்டா; நொய்டாவில் அதி வேகமாக வந்த கார் மோதியதில் 5 வயது சிறுமி பலியானார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
உ.பி. நொய்டாவைச் சேர்ந்தவர் குல் முகமது. இவர் தமது 5 வயது மகளை மருத்துவ பரிசோதனைக்காக தமது ஸ்கூட்டரில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வழியில் அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார், குல் முகமது வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த கார் ஹரியானா மாநில பதிவெண் கொண்டது.
நொடிப்பொழுதில் நிகழ்ந்த இந்த விபத்தில், குல் முகமதுவின் 5 வயது மகள் பலியானார். விபத்தில் இருவர் காயம் அடைந்தனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, காரில் இருந்த நொய்டாவைச் சேர்ந்த யாஷ் சர்மா(22), அபிஷேக் ராவத்(22) என்ற இருவரை கைது செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில் இருவரும் மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
டிசிஎஸ் நிறுவனத்தில் 12,200 ஊழியர்கள் வேலை நீக்கம் ; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை: நெல்லையில் அதிர்ச்சி
-
வரலாறு படைத்தார் கில்; இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் யாரும் செய்திடாத சாதனை
-
கனமழையால் மூணாறில் 2 இடங்களில் நிலச்சரிவு; ஒருவர் பலி, போக்குவரத்து பாதிப்பு
-
விருந்தினர் மாளிகையில் போதை விருந்து: முன்னாள் அமைச்சர் மருமகன் உள்ளிட்ட 7 பேர் கைது
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; ரூ.17 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை!