நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க கலெக்டர் அறிவுரை
கடலுார் : குழந்தைகள் நீர் நிலைகள் அருகே செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என, கலெக்டர் சி பி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளது.
இதன் காரணமாக மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் குழந்தைகள் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் ஆற்றுப்பகுதியில் குளிப்பதையும், துணிகள் துவைப்பதையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இளைஞர்கள் ஆபத்தை உணராமல் நண்பர்களுடன் விடுமுறை நாட்களில் பெற்றோர் அனுமதியின்றி நீர்நிலைகளில் குளிக்கச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அருகே செல்லாமல் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
மேலும்
-
ஆண்டு வருமானம் ரூ.3 மட்டுமே கொண்ட விவசாயி:குளறுபடி வருமானச் சான்றிதழ் இணையத்தில் வைரல்
-
தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த பிரதமருக்கு நன்றி; அண்ணாமலை
-
பெயர் மாறியதால் வந்த வினை; 22 நாட்கள் சிறைவாசம்; 17 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்திய உ.பி நபர்!
-
ஆபத்தில் முடிந்த அதிவேக பயணம்: நொய்டாவில் கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி
-
வேலை தேடி துபாய் சென்ற ஹைதராபாத் பெண்; போதைப்பொருள் வழக்கில் கைது
-
முதலாம் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி!