லாரிடயர்கள் திருடிய மூவர் கைது
மந்தாரக்குப்பம்: லாரி டயர்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடலுாரைச் சேர்ந்தவர் விஜயகுமார். மந்தாரக்குப்பம் அடுத்த ரோமபுரி பகுதியில் லாரி சர்வீஸ் நடத்தி வருகிறார். இங்கு கடந்த 21ம் தேதி, 6 புதிய டயர்கள் திருடு போனது. இதுகுறித்து அவர், மந்தாரக்குப்பம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து டயர் திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், இங்கு ஏற்கனவே பணிபுரிந்த விருத்தாசலம் அடுத்த அரசக்குழியை சேர்ந்த அருள்ராயப்பன்,36; என்பவரை சந்தேகத்தின் பேரில், அவரது வீட்டில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர், தனது நண்பர்கள் குப்பநத்தம் லோகநாதன், கெங்கைகொண்டான் திருஞானம்,35; ஆகியோருடன் சேர்ந்து டயர்கள் திருடியதை ஒப்புக் கொண்டார். உடன், போலீசார், அருள்ராயப்பன் உட்பட 3 பேரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆண்டு வருமானம் ரூ.3 மட்டுமே கொண்ட விவசாயி:குளறுபடி வருமானச் சான்றிதழ் இணையத்தில் வைரல்
-
தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த பிரதமருக்கு நன்றி; அண்ணாமலை
-
பெயர் மாறியதால் வந்த வினை; 22 நாட்கள் சிறைவாசம்; 17 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்திய உ.பி நபர்!
-
ஆபத்தில் முடிந்த அதிவேக பயணம்: நொய்டாவில் கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி
-
வேலை தேடி துபாய் சென்ற ஹைதராபாத் பெண்; போதைப்பொருள் வழக்கில் கைது
-
முதலாம் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement