வரலாறு படைத்தார் கில்; இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் யாரும் செய்திடாத சாதனை

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது இன்னிங்சில் கில் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு வருகிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி வரும் கேப்டன் கில் புதிய சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில், கடந்த 23ம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் மான்செஸ்டரில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி 358 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் (150), பென் ஸ்டோக்ஸ் (141) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்கள் சேர்த்தது.
4ம் நாளான நேற்று 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு, ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகியோர் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதன்பிறகு, ஜோடி சேர்ந்த கேப்டன் கில் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்தனர். நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. கில் (78), ராகுல் (87) அவுட்டாகாமல் இருந்தனர்.
இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக ஆடிய கில், ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தார். இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த ஆசிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் (631), டிராவிட் (602), கோலி (593) ஆகியோர் இந்தப்பட்டியலில் உள்ளனர்.
தொடர்ந்து, 5ம் நாள் ஆட்டம் தொடங்கியதும் கே.எல்.ராகுல் 90 ரன்கள் எடுத்த போது, ஸ்டோக்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ., முறையில் அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கில் 103 ரன்களில் அவுட்டானார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்துள்ளது.
இந்தத் தொடரில் கேப்டன் கில் 700 ரன்களை கடந்துள்ளார். இதன்மூலம், இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்களுக்கு அதிகமாக விளாசிய இந்திய வீரர் மற்றும் கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக இந்திய வீரர்கள் யாரும் இந்த சாதனையை படைத்ததில்லை.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் வெஸ்ட் இண்டீஸில் ஒரு டெஸ்ட் தொடரில் 774 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல, வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ஒரு டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
@block_B@
கோலி, கவாஸ்கர் சாதனை சமன்
மான்செஸ்டர் டெஸ்டில் நிதானமாக ஆடிய கேப்டன் கில் சதம் அடித்தார். இந்தத் தொடரில் அவர் அடிக்கும் 4வது சதம் இதுவாகும். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்களை அடித்த இந்திய வீரர்கள் கவாஸ்கர் (4), கோலி (4) ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். அதேபோல, ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்களை அடித்த கேப்டன்களான சுனில் கவாஸ்கர் (4), டான் பிராட்மேன் (4) ஆகியோரின் சாதனையையும் கில் சமன் செய்துள்ளார்.block_B
மேலும்
-
பிரதமருக்கும், ஜக்தீப் தன்கருக்கும் இடையே என்ன பிரச்னை; கார்கேவுக்கு தீராத சந்தேகம்
-
காங்கோ சர்ச்சில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 21 பேர் உயிரிழப்பு
-
மேட்டூர் அணை நீர் திறப்பு 1 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
-
மழை விட்டும் தூவானம் விடவில்லை; தாய்லாந்து-கம்போடியா இடையே நீடிக்கும் மோதல்
-
விமானத்தில் பயணிகள் போராட்டம்; கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட பெண் ஊழியர்
-
சிங்கப்பூருடன் வலுவான நட்பில் முக்கிய பங்கு: சந்திரபாபு நாயுடு பெருமிதம்