கனமழையால் மூணாறில் 2 இடங்களில் நிலச்சரிவு; ஒருவர் பலி, போக்குவரத்து பாதிப்பு

இடுக்கி: கனமழை எதிரொலியாக, மூணாறில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.
@1brகேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த பல நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. எர்ணாகுளம், காசர்கோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களுகு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இடைவிடாது கொட்டி வரும் மழையால்,இடுக்கி மாவட்டம் மூணாறில் இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு தாவரவியல் பூங்கா அருகே நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டு லாரி மீது விழுந்து டிரைவர் கணேசன்(58) என்பவர் இறந்தார். உடன் இருந்த முருகன் என்பவர் படுகாயம் அடைந்தார்.
அதே பகுதியில் இன்று காலை 8:00 மணிக்கு மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 20 மீட்டர் தொலைவுக்கு கற்கள் நிரம்பி காணப்பட்டது. போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
சாலையில் கிடக்கும் கற்களை அகற்ற 2 நாட்களாகும். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. மழை தொடர்ந்து நீடிப்பதால், நிலச்சரிவு மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய ஜோடி 2வது இடம்: கன்டென்டர் டேபிள் டென்னிசில்
-
ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
-
குரைக்கக்கூடாது; வால் ஆட்டினால் போதும்; வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய்களுக்கு சிறப்பு பயிற்சி!
-
பிரதமருக்கும், ஜக்தீப் தன்கருக்கும் இடையே என்ன பிரச்னை; கார்கேவுக்கு தீராத சந்தேகம்
-
காங்கோ சர்ச்சில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 21 பேர் உயிரிழப்பு
-
மேட்டூர் அணை நீர் திறப்பு 1 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
Advertisement
Advertisement