சத்தீஸ்கரில் என்கவுன்டர்; ரூ.17 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகளை ஒழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ( ஜூலை 27) பிஜாப்பூர் மாவட்டத்தில், நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், நக்சலைட்டுகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட நக்சல்களில் இரண்டு பெண்களும் அடங்குவர். இவர்கள் குறித்து தகவல், தெரிவிப்பவர்களுக்கு ரூ.17 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
சம்பவ இடத்திலிருந்து, வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

மேலும்
-
இந்திய ஜோடி 2வது இடம்: கன்டென்டர் டேபிள் டென்னிசில்
-
ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
-
குரைக்கக்கூடாது; வால் ஆட்டினால் போதும்; வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய்களுக்கு சிறப்பு பயிற்சி!
-
பிரதமருக்கும், ஜக்தீப் தன்கருக்கும் இடையே என்ன பிரச்னை; கார்கேவுக்கு தீராத சந்தேகம்
-
காங்கோ சர்ச்சில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 21 பேர் உயிரிழப்பு
-
மேட்டூர் அணை நீர் திறப்பு 1 லட்சம் கன அடியாக அதிகரிப்பு