இந்திய ஜோடி 2வது இடம்: கன்டென்டர் டேபிள் டென்னிசில்

பியூனஸ் ஏர்ஸ்: கன்டென்டர் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மீத், யாஷஸ்வினி ஜோடி 2வது இடம் பிடித்தது.

அர்ஜென்டினாவில், டபிள்யு.டி.டி., கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், யாஷஸ்வினி ஜோடி, பிரேசிலின் ஹுகோ கால்டெரானோ, புருனா டாகாஹாஷி ஜோடியை சந்தித்தது. இதில் ஏமாற்றிய ஹர்மீத், யாஷஸ்வினி ஜோடி 0-3 (15-17, 7-11, 11-13) என்ற கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.
இந்தியாவின் அங்கூர் பட்டாசார்ஜி, அய்ஹிகா முகர்ஜி ஜோடி அரையிறுதியோடு திரும்பியது.

Advertisement