ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்

செயின்ட் கிட்ஸ்: கிரீன், இங்லிஸ் அரைசதம் விளாச ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 4வது வெற்றியை பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஏமாற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, 3-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நான்காவது போட்டி செயின்ட் கிட்சில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா 'பவுலிங்' தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (18), கேப்டன் ஷாய் ஹோப் (10), ராஸ்டன் சேஸ் (0) சோபிக்கவில்லை. ரூதர்போர்டு (31), ராவ்மன் பாவெல் (28), ஷெப்பர்டு (28), ஜேசன் ஹோல்டர் (26) ஆறுதல் தந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 205/9 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட் சாய்த்தார்.
சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்சல் மார்ஷ் (0) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய மேக்ஸ்வெல், 18 பந்தில், 47 ரன் (6x6, 1x4) விளாசினார். ஜோஷ் இங்லிஸ் (51), கேமிரான் கிரீன் (55) அரைசதம் கடந்தனர். ஆரோன் ஹார்டி (23) கைகொடுக்க,
ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 206 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை மேக்ஸ்வெல் வென்றார். ஆஸ்திரேலியா 4-0 என முன்னிலை பெற்றது.
மேலும்
-
பீஹாரில் 35 லட்சம் வாக்காளர்கள் எங்கே : வாக்காளர் பட்டியல் குறித்து எழும் கேள்வி
-
பெண்களுக்கான நிதியுதவி திட்டத்தில் பலனடைந்த 14 ஆயிரம் ஆண்கள் மஹாராஷ்டிராவில் புது மோசடி
-
திவ்யா-ஹம்பி மீண்டும் 'டிரா': உலக கோப்பை செஸ் பைனலில்
-
வெள்ளி வென்றார் அன்கிதா: உலக பல்கலை., தடகளத்தில்
-
உலக விளையாட்டு செய்திகள்
-
இந்தியாவுக்கு 21 பதக்கம்: பிரிட்டிஷ் பாரா பாட்மின்டனில்