சிங்கப்பூருடன் வலுவான நட்பில் முக்கிய பங்கு: சந்திரபாபு நாயுடு பெருமிதம்

அமராவதி: இந்தியா-சிங்கப்பூர் உறவுகளை வலுப்படுத்துவதில் தெலுங்கு சமூகத்தினர் முக்கிய பங்கு வகிப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதலீடுகளை ஈர்ப்பதற்காக 5 நாள் பயணமாக இன்று சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் சென்றுள்ளனர்.புலம்பெயர்ந்தோர் சந்திப்பு உட்பட 29 நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.
இது குறித்து சந்திரபாபு நாயுடு பதிவிட்டுள்ளதாவது:
ஆந்திர மாநில வளர்ச்சிப் பயணத்தில் சிங்கப்பூர் ஒரு முக்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது. ஆசியாவின் மிகவும் முன்னேறிய மற்றும் எதிர்காலத்தை நோக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாகவும், ஆழமான,ஒத்துழைப்பு மற்றும் மதிப்புமிக்க வாய்ப்பு தரும் நாடாக இருந்து வருகிறது.
இந்த வருகை நமது நம்பகமான நட்புறவை புதுப்பிக்கவும், பிராண்ட் ஆந்திராவை உலக அரங்கில் ஊக்குவிக்கவும், நமது புதிய முற்போக்கான கொள்கைகளை வெளிப்படுத்தவும், உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நீடித்த ஒத்துழைப்புகளை உருவாக்கவும் ஒரு வாய்ப்பு.
இரு நாடுகளுக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதில் தெலுங்கு மொழி பேசுபவர்களின் இருப்பும் பங்களிப்பும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்களின் அன்பான வரவேற்பு மற்றும் பாசத்திற்கு நான் நன்றி கூறுகிறேன்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு பதிவிட்டுள்ளார்.
மேலும்
-
போலி துாதரின் 162 நாட்டுப்பயணம்,ரூ.300 கோடி மோசடி: அதிரடிப் படை போலீசார் அதிர்ச்சி
-
பாரதம் என்றே அழைக்க வேண்டும்: மோகன் பகவத் வலியுறுத்தல்
-
இந்திய ஜோடி 2வது இடம்: கன்டென்டர் டேபிள் டென்னிசில்
-
ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
-
குரைக்கக்கூடாது; வால் ஆட்டினால் போதும்; வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய்களுக்கு சிறப்பு பயிற்சி!
-
பிரதமருக்கும், ஜக்தீப் தன்கருக்கும் இடையே என்ன பிரச்னை; கார்கேவுக்கு தீராத சந்தேகம்