டிசிஎஸ் நிறுவனத்தில் 12,200 ஊழியர்கள் வேலை நீக்கம் ; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுடில்லி: ஊழியர்கள் 12,200 பேரை டிஸ்மிஸ் செய்ய போவதாக டிசிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக டாடா கன்சல்டன்சி (TCS) நிறுவனம் விளங்கி வருகிறது. இந் நிறுவனத்தின் கிளைகளில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.
இந் நிலையில் நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வரும் 12,200 பேரை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை அந்நிறுவனத்தினன் முதன்மை செயல் அதிகாரி கிரிதி வாசன் வெளியிட்டு உள்ளார்.
அவர் மேலும் கூறி உள்ளதாவது;
பணிநீக்கம் செய்யப்பட உள்ள அனைவருமே இடைநிலை மற்றும் மூத்த நிலையில் பணியாற்றி வரும் ஊழியர்களாவர். ஒட்டு மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் இந்த ஆட்குறைப்பு என்பது வெறும் 2 சதவீதம் மட்டுமே. இது எளிதான முடிவு அல்ல.
செயற்கை நுண்ணறிவு மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்துவது பற்றி யோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்த பணி நீக்க நடவடிக்கை என்பது, 2026ம் ஆண்டு நிதியாண்டில் (அதாவது ஏப்.2025 முதல் மார்ச் 2026 வரை) படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது.



மேலும்
-
இந்திய ஜோடி 2வது இடம்: கன்டென்டர் டேபிள் டென்னிசில்
-
ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
-
குரைக்கக்கூடாது; வால் ஆட்டினால் போதும்; வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய்களுக்கு சிறப்பு பயிற்சி!
-
பிரதமருக்கும், ஜக்தீப் தன்கருக்கும் இடையே என்ன பிரச்னை; கார்கேவுக்கு தீராத சந்தேகம்
-
காங்கோ சர்ச்சில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 21 பேர் உயிரிழப்பு
-
மேட்டூர் அணை நீர் திறப்பு 1 லட்சம் கன அடியாக அதிகரிப்பு