உரிமைகளை குடிமக்கள் தெரிந்து கொள்வது முக்கியம்: தலைமை நீதிபதி
ஸ்ரீநகர்: குடிமக்கள், தங்களது உரிமைகளை தெரிந்து கொள்வது முக்கியம் எனக்கூறியுள்ள சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய், அறிவு இல்லாத உரிமையால் எந்த பயனும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் கருத்தரங்கில் கவாய் பேசியதாவது: நாட்டின் கடைசி மக்களுக்கும் நீதி கிடைக்கச் செய்வதை நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இணைந்து உறுதி செய்யவேண்டும். இந்த திசையில் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் பணியாற்றிவருகிறது. இதன் பணிகளை நாங்களும் செய்ய முயற்சித்து வருகிறோம். தங்களுக்கான உரிமை பற்றிய அறிவை மக்கள் பெறாத வரை, அந்த உரிமையால் எந்த பலனும் கிடைக்காது.
நாட்டின் அரசியலமைப்பின் மூலம் அரசியல் சமூக மற்றும் பொருளாாதார நீதிக்காக நாம் நீதிபதிகளாக உறுதியளித்துள்ளோம். நீதி அதன் உண்மையான உணர்வில் அமல்படுத்தப்படுவதற்கு கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
.
மேலும்
-
100 ஏரிகள் திட்டத்தை விரைந்து செயல்படுத்த காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
-
ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு இன்று பெருமாள் கோவில்களில் பூஜை
-
கூட்டுறவு சங்கத்தில் 'லாக்கர்' வசதி இல்லை நகை அடமான கடன் வழங்குவதில் சிக்கல்
-
பசுமை குடில் சீரமைப்பில் அலட்சியம்
-
யுனிவர்சல் மெட்ரிக் பள்ளியில் கராத்தே திறன் தேர்வு போட்டி
-
சதுர்த்திக்கு 1.50 லட்சம் சிலைகள் இந்து முன்னணி மாநில செயலர் தகவல்