ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு இன்று பெருமாள் கோவில்களில் பூஜை
சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் தனி சன்னதியில் உள்ள ஆண்டாள் நாச்சியாருக்கு, 10 நாட்கள் நடக்கும் ஆடிப்பூர திருவிழா, கடந்த, 18ல் தொடங்கியது.
தினமும் ஆண்டாள் தாயார் விதவித அலங்காரங்களில், கோவிலில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நன்னாளான இன்று காலை, மூலவர், உற்சவர் ஆண்டாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து சர்வ அலங்காரம் மற்றும் தங்க கவசத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை ஸாதிப்பார். மாலையில் அழகிரிநாதருடன் ஆண்டாள் நாச்சியார், 'மாலை மாற்றும்' உற்சவம், பட்டாச்சாரியார்களால் நடத்தப்படுகிறது.
அதேபோல் பட்டைக்கோவில் வரதராஜர், அம்மாபேட்டை சவுந்தரராஜர் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில், 10 நாட்களாக ஆடிப்பூர திருவிழா நடந்து வருகிறது. இன்று பெரும்பாலான கோவில்களில் பெருமாளுடன் ஆண்டாள் தாயார், 'சேர்த்தி சேவை'யிலும், சில கோவில்களில் திருக்கல்யாண உற்சவத்துடன், சிறப்பு பூஜை நடக்கிறது.
பால்குட ஊர்வலம்
இன்று ஆடிப்பூரத்தையொட்டி, தலைவாசல், புத்துார் மாரியம்மன் கோவிலில் வளையல் காப்பு அலங்காரம், பூஜை நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று ஏராளமான பெண்கள், பால் குடங்களை எடுத்து, முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து மூலவர் அம்மன் மீது ஊற்றி அபி ேஷகம் செய்தனர். பின் மாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்; வரி 15% குறைப்பு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
45,788 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
-
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
-
ராயனுார் சாலையில் 'இருட்டு' கூடுதல் மின்விளக்கு தேவை
-
கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் அரசு பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை