100 ஏரிகள் திட்டத்தை விரைந்து செயல்படுத்த காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

இடைப்பாடி: மேட்டூர் அணை உபரி நீரால், சேலம் மாவட்டத்தில் உள்ள, 100 ஏரிகள் திட்டத்தை விரைவாக செயல்படுத்தக்கோரி, இடைப்பாடி அருகே இருப்பாளி ஏரியில் நேற்று, காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தலைவர் வேலன் தலைமை வகித்து பேசியதாவது: காவிரி உபரிநீர் திட்டத்தில் உள்ள ஏரிகளை இணைக்கும் கால்வாய் பணி முழுமை அடையவில்லை. இதனால் நிறைய ஏரிகளுக்கு காவிரி வெள்ள உபரிநீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உபரிநீர் கால்வாய்ப் பணிகளை முடித்து, அனைத்து ஏரிகளுக்கும் உபரிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இருப்பாளி முன்னாள் தலைவர் கிருஷ்ணன், செட்டி
மாங்குறிச்சி முன்னாள் தலைவர் சித்தன், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement