சதுர்த்திக்கு 1.50 லட்சம் சிலைகள் இந்து முன்னணி மாநில செயலர் தகவல்

சேலம்: இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமை வகித்தார். மாநில செயலர் வெங்கடேசன், நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனை
களை வழங்கினார்.


இதுகுறித்து வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆண்டுதோறும் ஒரு கருத்தின் அடிப்படையில் சதுர்த்தி விழா நடக்கும். நடப்பாண்டு, 'நம்ம சாமி, நம்ம கோவில், நாமே பாதுகாப்போம்' எனும் கருத்தை வைத்து வழிபாடு நடக்கவுள்ளது. மாநிலம் முழுதும், 1.50 லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட உள்ளோம்.
ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு அரசு சுங்கம் வசூலிக்கிறது. இதுகுறித்து கேட்டபோது, கோவில் சுற்றுலா தலம் பிரிவில் வருகிறது என சொல்கின்றனர். இதனால் ஜூலை, 29ல்(நாளை), ஏத்தாப்பூரில், டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் தம்மம்பட்டி
யில் ஆலோசனைக்கூட்டம், நகர தலைவர் ராஜா
தலைமையில் நடந்தது.
அதில், ஆக., 27ல், சதுர்த்தி விழாவை ஹிந்து எழுச்சி திருவிழாவாக கொண்டாடுதல்; தம்மம்பட்டியில், 50க்கும் மேற்பட்ட சிலைகளை பிரதிஷ்டை செய்தல்; வரும், 29ல் ஏத்தாப்பூரில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயலர் வெங்கடேஸ்வரன், மாவட்ட செயலர் பிரசாந்த், சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார், மாநில, மாவட்ட நிர்வாக குழுவினர் பங்கேற்றனர்.

Advertisement